இலங்கை பிரதான செய்திகள்

புன்னாலைக்கட்டுவனில் டீசலுக்கு காத்திருந்த பேருந்து சில்லில் அகப்பட்டு பயணி உயிரிழப்பு!

எரிபொருளுக்காக வரிசையில் நின்ற தனியார் பேருந்தின் கீழ் இறங்கி நிலத்தில் அமர்ந்திருந்த பயணி, சாரதியின் கவனக்குறைவினால் பேருந்து சில்லு ஏறி உயிரிழந்துள்ளார் .
புன்னாலைக்கட்டுவன் எரிபொருள் நிரப்புநிலையத்தில், நடைபெற்ற இந்த சம்பவத்தில் ஊரெழு கிழக்கைச் சேர்ந்த தர்மலிங்கம் சதீஸ் ( வயது 37 ) என்பவரே உயிரிழந்தார் .
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,


உயிரிழந்த பயணி யாழில் இருந்து  வயாவிளான் நோக்கி பேருந்தில் பயணித்துள்ளார். பயணத்தின் போது, பேருந்தில் தூங்கியமையால்,  வயாவிளானில் இறங்கவில்லை . பேருந்து நடத்துனரும், அதனை கவனிக்கவில்லை .


அவர் மீண்டும் வசாவிளான் செல்வதற்காக யாழ்ப்பாணம் நோக்கி மீண்டும் பேருந்தில் பயணித்த போது , புன்னாலைக்கட்டுவனில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசலுக்காக வரிசையில் பேருந்து காத்திருந்துள்ளது. அதன் போது , குறித்த பயணி பேருந்தில் இருந்து  கீழே இறங்கி நிலத்தில் அமர்ந்திருந்துள்ளார் . அதனை அவதானிக்காக சாரதி பேருந்தை எடுத்த போது பயணி மீது பேருந்து ஏறியுள்ளது .


பயணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து, பேருந்து சாரதி அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார். சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.