உலகம் பிரதான செய்திகள்

பிரிட்டிஷ் பிரதமர் ஜோன்சன் கீவ் நகருக்குத் திடீர் விஜயம்!


உக்ரைனுக்கு 120 கவச வாகனங்கள் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் உதவி!

பிரிட்டிஷ் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் சனிக்கிழமை உக்ரைன் தலைநகர் கீவுக்குத் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார். அதன்போது உக்ரைன் படைகளுக்கு120 இராணுவக் கவச வாகனங்களையும்புதிய கப்பல் எதிர்ப்பு ஏவுகணைத் தொகுதியையும் வழங்கினார் என்று “நம்பர் 10” பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


மேலும் 100 மில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான இராணுவ உதவிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த பெப்ரவரி 24 இல் ரஷ்யா போரைத் தொடக்கிய பிறகு கீவ் நகருக்குச் சென்றுஅதிபர் ஷெலன்ஸ்கியை நேரில் சந்திக்கின்ற வல்லரசுத் தலைவர் ஜோன்சன் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் கீவ்நகர வீதிகளில் நடந்து பார்வையிடும் படங்களைச் செய்தி ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அங்கு வைத்து அதிபர்ஷெலன்ஸ்கியை “சிங்கம்” என்று புகழ்ந்தார் ஜோன்சன்.


“உக்ரைன் கணிப்புகளை மீறி, ரஷ்யப் படைகளைக் கீவ் நகரின் வாயில்களில் இருந்து பின்னுக்குத்தள்ளி, 21ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய சாதனையை அடைந்துள்ளது. இந்தப் போரில் பிரித்தானியா அவர்களுடன் உறுதியாக நிற்கிறது என்பதை நான் இன்று தெளிவுபடுத்தியுள்ளேன். நாங்கள் நீண்ட காலத்திற்கு இவ்வாறு ஐக்கியமாய் இருப்போம்,” என்று அவர் மேலும் கூறினார்.


உக்ரைனுக்கு மேற்கு நாடுகள் கவச வாகனங்களை ஏற்கனவே விநியோகித்துள்ளன. ஆனால் பிரிட்டன் அதன் நவீன ஹார்பூன் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைத் தொகுதியை (Harpoon anti-ship missile systems) வழங்குகிறது. ரஷ்யாவுக்கு எதிரான போரில் நேட்டோ நாடு ஒன்றுஇதுபோன்ற ஆயுத தளபாட உதவியைவழங்குவது இதுவே முதல் முறை ஆகும்.


உக்ரைனின் கிழக்குப் பகுதியில் போரில்தப்பி வெளியேறிக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான மக்களால் நிறைந்திருந்தரயில் நிலையம் ஒன்றை ரஷ்யப்படைகளின் ஏவுகணைகள் தாக்கியதில் ஐம்பதுக்கும் அதிகமானோர் உயிரிழந்த சம்பவத்துக்குப் பின்னரே பிரிட்டனின் இந்தப் புதிய இராணுவ உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


ஜரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வோன் டெர் லேயன்(European Commission President Ursula von der Leyen)வெள்ளிக்கிழமை கீவ் நகருக்குச் சென்றிருந்தார்.

    -பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
                         09-04-2022

Spread the love
 •   
 •   
 •   
 •   
 •  
 •  
 •  
 •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.