
அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள ப்ரூக்ளினில் சுரங்க புகையிரத நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 13 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . , உள்ளூர் நேரப்படி இன்று செவ்வாய்கிழமை காலை 8.30 மணியளவில் சன்செட் பூங்காவில் உள்ள 36வது வீதி என்ற புகையிரத நிலையத்தில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களில், சுரங்க புகையிரதநிலைய மேடையில் பயணிகள் பலர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை காண முடிகின்ற அதேவேளை மேலும் சம்பவ இடத்தில் வெடிபொருட்களும் இருப்பதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய சந்தேக நபரை தேடும் பணி தற்போது முடக்கி விடப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது
Spread the love
Add Comment