இலங்கை பிரதான செய்திகள்

காவல்துறையினாின் துப்பாக்கிப்பிரயோகத்தில் ஒருவா் பலி – பலா் காயம்

ரம்புக்கனையில் போராட்டத்தின் போது காவல்துறையினா் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 11 போ் காயமடைந்த நிலையில் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காயமடைந்தவா்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு கோாி ஒரு பகுதியினா் இன்று அதிகாலை 1.30 மணி முதல், கண்டி – கொழும்பு புகையிரத மார்க்கத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஏனையோர் ரம்புக்கனை – கேகாலை, குருநாகல் மற்றும் மாவனெல்ல வீதிகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

15 மணி நேரமாக இடம்பெற்ற போராட்டத்தின் போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் இடம்பெற்றதையடுத்து, ரம்புக்கனை காவல்துறையினர் கண்ணீர் புகை பிரயோகமும் நடத்தியுள்ளனர்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.