
ரம்புக்கனை காவல்துறைப்பிரிவில், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக, உடன் அமுலுக்கு வரும் வகையில் காவல்துறை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்குச் சட்டமானது நாளை (20) காலை வரையிலும் அமுலில் இருக்கும் என காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.
இதேவேளை அங்கு ஏற்பட்டுள்ள பதற்றமான நிலையை அடுத்து, நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக, காவல்துறை விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.எனத் தொிவிக்கப்பட்டுள்ளது
ரம்புக்கனையில் போராட்டத்தின் போது காவல்துறையினா் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 24 போ் காயமடைந்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love
Add Comment