Home இலங்கை நல்லூரானை தரிசித்த அமெரிக்க தூதுவர் ஆயரையும் சந்தித்தாா்

நல்லூரானை தரிசித்த அமெரிக்க தூதுவர் ஆயரையும் சந்தித்தாா்

by admin

யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள  அமெரிக்க தூதர் ஜூலி சுங்  இன்றைய தினம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடு மேற்கொண்டார். யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ள அமெரிக்க தூதுவர் நேற்று முதல் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடி வருகின்றார்

அதேவேளை இலங்கைக்கான அமொரிக்க தூதுவர் ஐீலி சுங் இன்றைய தினம் யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டீன் பெர்னாட் ஞானப்பிரகாஷம் ஆண்டகையை சந்தித்து கலந்துரையாடினார்.


யாழ்ப்பாண மாவட்டத்திற்கான பயணத்தினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமொரிக்க தூதுவர் ஐீலி சுங் பல்வேறு தரப்புக்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் இன்று காலை 8.30 மணியளவில் யாழ் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டீன் பெர்னாட் ஞானப்பிரகாஷம் ஆண்டகையை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.


குறித்த சந்திப்பில் யாழ்ப்பாணத்திலுள்ள தற்போதைய நிலைமைகள் மற்றும் சமகாலப் போக்குகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More