
ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தினை பதவி விலகக் கோரி நாளையதினம் இடம்பெறவுள்ள நாடுதழுவிய ரீதியிலான ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளிப்பதாக அக்கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் இன்று வெளியிட்டு வைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவ் அறிக்கையில்,
இலங்கை ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தினை பதவி விலகக் கோரி தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் மக்கள் போராட்டத்திற்கு தமது ஒத்துழைப்பை வழங்கும் முகமாக
நாளையதினம் (28) ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்வேறு துறைசார் தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய ரீதியிலான ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தினை முன்னெடுக்கவுள்ளனர்.
இதற்கு ஆதரவினை தெரிவித்தும் அரசுக்கு தொடர்ச்சியான அழுத்தத்தினை வழங்கும் முகமாகவும் இவ் வேலை நிறுத்தத்தில் பங்குகொள்ளுமாறு அனைத்து தொழிற்சங்கங்களையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேண்டி நிற்கின்றது என்றுள்ளது.
Add Comment