
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான பிரேரணை குறித்து கலந்துரையாடுவதற்காக சபாநாயகர் இந்தக் கூட்டத்தை கூட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் உள்ள சில கட்சிகள் மற்றும் குழுக்கள் அரசியலமைப்பை திருத்துவதற்கு ஏற்கெனவே பல யோசனைகளை சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளன.
சபாநாயகரிடம் அரசியலமைப்பு திருத்தங்களை கையளித்த குழுக்களில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அண்மையில் நாடாளுமன்றத்தில் சுயேச்சையாக செயற்படுவதாக அறித்த உறுப்பினர்கள் குழுவும் அடங்கும்.
இதேவேளை, அடுத்த வாரம் நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் விதம் மற்றும் அவற்றின் நிகழ்ச்சி நிரல் தொடர்பில் இந்தக் கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
இதேவேளை, பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற குழு கூட்டம் இன்று ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Add Comment