
எரிபொருள் விலையேற்றம், மின்வெட்டு, வாழ்க்கைச் செலவு உள்ளிட்ட அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக கண்டியில் ஒன்றிணைந்த ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் பேரணி இன்று மூன்றாவது நாளாக தொடர்கின்றது.
இரண்டாவது நாளான நேற்று (27.04.22) மாவனெல்லை பிரதான பஸ் தரிப்பிடத்திலிருந்து ஆரம்பமான ஆர்ப்பாட்ட பேரணி கலிகமுவவில் நிறைவடைந்தது.
அதன்படி இன்று கலிகமுவ நகரிலிருந்து தனோவிட்ட வரையிலான எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
Spread the love
Add Comment