இலங்கை பிரதான செய்திகள்

தமிழகம் செல்ல முயன்ற திருகோணமலை வாசிகள் கே.கே.எஸ் கடற்பரப்பில் கைது!

திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் வந்து, காங்கேசன்துறை கடற்பரப்பின் ஊடாக இந்திய செல்ல முற்பட்ட 13 பேர் காங்கேசன்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலையை சேர்ந்த 5 ஆண்கள் , 5 பெண்கள் மற்றும் 3 சிறுவர்கள் உள்ளடங்கலாக 13 பேர் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்பரப்பின் ஊடாக நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு இந்தியா நோக்கி படகொன்றில் பயணித்த வேளை கடல் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த காங்கேசன்துறை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.


கைது செய்யப்பட்ட 13 பேரையும் கடற்படையினர் , கடற்படை முகாமில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் , அவர்களை சட்ட நடவடிக்கைக்காக காவல்துறையினரிடம் கையளிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.