
யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பிரான்பற்று பகுதியில் உள்ள வீடொன்றில் இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற தீ விபத்தில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தெல்லிப்பழை மகாஐனாக் கல்லூரியில் க.பொ.த சாதாரண தரத்தில் கற்கும் மாணவியான சுதன் சதுர்சியா (வயது 17) எனும் மாணவியே உயிரிழந்துள்ளார்.
குறித்த வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதனை அறிந்த அயலவர்கள் வீட்டில் பரவிய தீயினை அணைத்து , மாணவியை அங்கிருந்து மீட்டு சங்கானை வைத்திய சாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
வைத்திய சாலையில் மாணவி ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர். சம்பவம் தொடர்பில் இளவாலை காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Spread the love
Add Comment