ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கும் முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில், முக்கிய சந்திப்பொன்று இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை மற்றும் தற்போதைய பொருளாதார நிலைமைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் காலி முகத்திடல் மைதானத்தில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது