உலகம் பிரதான செய்திகள்

பிரான்ஸின் பெண் பிரதமராகஎலிசபெத் போர்ன் நியமனம்

மக்ரோனின் புதிய அரசின் பிரதமராக முன்னாள் தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் எலிசபெத் போர்ன் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஜீன் காஸ்ரோதனது பதவியில் இருந்து விலகியதை அடுத்து எலிசபெத் போர்னின் பதவியேற்பு வைபவம் இன்று மாலை எலிஸேமாளிகையில் நடைபெற்றது.

மே, 1991 இல் பிரான்ஷூவா மித்ரோன்அரசாங்கத்தில் முதலாவது பெண் பிரதமராக எடித் கிரெசன் (Edith Cresson) என்பவர் நியமிக்கப்பட்டார். அதன் பின்னர்இரண்டாவது வாய்ப்பாக இப்போதுதான் நாடு ஒரு பெண் பிரதமரைப் பெறுகிறது.

61 வயதுடைய (18 ஏப்ரல் 1961) எலிசபெத் போர்ன் சோசலிஸக் கட்சியின் முன்னாள் உறுப்பினராவார். 2017தேர்தல் சமயத்தில் அவர் அதிபர் மக்ரோனுக்குத் தனது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார்.

அதன் பின் சோசலிஸக் கட்சியிலிருந்து விலகிமக்ரோனின் La République En Marché கட்சியில் இணைந்தார். 2019-2020 காலப்பகுதியில் சூழலியல் மற்றும் உள்ளீடான மாற்றம் தொடர்பான அமைச்சராகவும் 2017-2019 காலப் பகுதியில் போக்குவரத்து அமைச்சராகவும் 2020 க்குப் பின் தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சராகவும் எலிசபெத் போர்ன் பதவி வகித்திருந்தார்

இதேவேளை, இன்று பதவி விலகியமுன்னாள் பிரதமர் ஜீன் காஸ்ரோவுக்குஅதிபர் மக்ரோன் உட்பட அரசியல் பிரமுகர்கள் பலரும் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துள்ளனர். நாடுபெருந் தொற்று நோயின் பிடியில் சிக்கியிருந்த சமயத்தில் பிரதமராகப் பதவியேற்று அரச நிர்வாகத்தை வழிநடத்தியமைக்காககப் பலரும் அவரைப் புகழ்ந்துபாராட்டியுள்ளனர்.

——————————————————————- –

பாரிஸிலிருந்து குமாரதாஸன். 16-05-2022

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.