
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் இன்று (19) கொழும்பில் நடத்தப்பட்ட போராட்டப் பேரணி, மீது காவல்துறையினா் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனா்.
கொழும்பு கோட்டையில் உள்ள உலக வர்த்தக மைய கட்டிடத்திற்கு அருகில் வைத்து இவ்வாறு காவல்துறையினா் கண்ணீர் புகை மற்றும் நீர்தாரை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது
Spread the love
Add Comment