இலங்கை பிரதான செய்திகள்

யாழில் – காவற்துறையினரின் கண் முன்னே முறைகேடு!

யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதி – கஸ்தூரியார் வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை (23.05.22) இரவு குழப்ப நிலை ஏற்பட்டது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மோசடிகள் , முறைகேடுகள் குழப்பங்கள் இன்றி விநியோக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஏதுவாக காவற்துறையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் போலீசாருக்கு முன்பாகவே , பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவித்தலை மீறி குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 20 லீட்டர் கொள்வனவு உடைய கொள்கலன்களில் எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு எரிபொருள் விநியோகித்தவர்கள் , நீண்ட நேரமாக மோட்டார் சைக்கிள்களில் வரிசையில் காத்திருந்தவர்களுக்கு 500 ரூபாய்க்கு மாத்திரமே பெற்றோல் விநியோகிக்க முடியும் என அறிவித்தமையால் குழப்ப நிலை ஏற்பட்டது

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.