Home இலங்கை 50 ஆவது நாளில் காலிமுகத்திடல் போராட்டம்!

50 ஆவது நாளில் காலிமுகத்திடல் போராட்டம்!

by admin

காலிமுகத்திடல் போராட்டம் இன்று 50 ஆவது நாளை எட்டியுள்ளது. இதனை கொண்டாடும் வகையில் காலி முகத்திடலை மையமாக கொண்டு பாரிய போராட்டமொன்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

சாதாரண தர மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் போராட்டம் நடத்துமாறு போராட்டக்காரர்கள் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதேவேளை, ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவதற்கு தடை விதித்து நீதிமன்ற உத்தரவு ஒன்று பெறப்பட்டுள்ளது. அதனடிப்படையில் யோர்க் வீதி, பாங்க் வீதி மற்றும் சத்தம் வீதி உட்பட சில வீதிகளுக்கு நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோட்டை காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட எந்தவொரு அரச நிறுவனத்திற்கோ அல்லது உத்தியோகபூர்வ இல்லத்திற்கோ நுழைந்து சேதப்படுத்துதல் போன்ற எந்தவொரு சட்டவிரோத செயற்பாடுகளையும் மேற்கொள்ளக்கூடாது எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More