இலங்கை பிரதான செய்திகள்

“நாட்டுக்காக மகிந்தவை நீக்கும் வாழ்வின் கடினமான முடிவை எடுத்தேன்”

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை, பிரதமர் பதவியிலிருந்து நீக்குவதற்கு எடுத்த முடிவு தனது அரசியல் வாழ்க்கையில் எடுத்த கடினமான முடிவாகுமென, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நேற்று (30.05.22) நடைபெற்ற ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டத்தில் கருத்து வெளியிட்ட அவர், அந்த கடினமான தீர்மானத்​தை நாட்டுக்காகவே தான் எடுத்ததாகவும், நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே எடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தேவையான மறுசீரமைப்புகளை முன்னெடுப்பதற்கு தான் தயார் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தன்னுடைய விருப்பத்தின் பேரிலேயே, அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட விருகிறது. ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்தது. அவர் மீதிருந்த நம்பிக்கையில் ஆகும் எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, அந்த நம்பிக்கையின் அடிப்படையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு நல்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.