இலங்கை பிரதான செய்திகள்

யாழ் கொல்லங்கலட்டியில் வெட்டுக் காயங்களுடன் மூதாட்டி சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை, கொல்லங்கலட்டி பகுதியில் வெட்டுக்காயங்களுடன் மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


கிடைத்த தகவலுக்கு அமைய, இன்று காலை சடலம் மீட்கப்பட்டதாக காவற்துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.

78 வயதான இந்தப் பெண் கூரான ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. காங்கேசன்துறை காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.