
இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையில், சர்வதேச அளவில் நன்கொடையாக வழங்கப்படும் நாட்டிற்கு தேவையான அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை சரக்குக் கட்டணமின்றி விமானத்தில் ஏற்றிச் செல்வதற்கான பொறுப்பை தாம் ஏற்பதாக ஸ்ரீலங்கா ஏயார்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இலங்கையில் உள்ள மருத்துவமனைகளுக்கு வெளிநாட்டில் இருந்து நன்கொடையாக வழங்கப்படும் மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களை இலவசமாக விமானம் மூலம் அனுப்பும் பணியை தாம் ஏற்பதன் மூலமாக, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன சமூகப் பொறுப்புப் பிரிவு, நாட்டின் நீண்டகால மருந்துப் பற்றாக்குறையைச் சமாளிப்பதில் சிக்கல் உள்ள மருத்துவமனைகளுக்கும், உயிர்காக்கும் மருந்துகளைச் சார்ந்திருக்கும் நோயாளிகளுக்கும் விரைவாக உதவமுடியும் என நம்புவதாகவும் அறிவித்துள்ளது.
Spread the love
Add Comment