
யாழில் 6 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குடும்பத்தலைவரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இளவாலை காவற்துறைப் பிரிவுக்கு உள்பட்ட பிரான்பற்று பகுதியில் இந்தச் சம்பவம் கடந்த சனிக்கிழமை (25.06.22) இடம்பெற்றது.
சம்பவத்தையடுத்து சிறுமிக்கு ஏற்பட்ட மன உளைச்சலையடுத்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது.
சிறுமி வழங்கிய தகவலின் அடிப்படையில் அவரது தந்தையின் நண்பரான அயல் வீட்டை சேர்ந்த 45 வயதுடைய குடும்பத்தலைவர் ஒருவர் இளவாலை காவற்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் நேற்றைய தினம் திங்கட்கிழமை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். அதனை அடுத்து சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது
Spread the love
Add Comment