
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள ஐ .ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முன்பாக யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையை மறித்து போராட்டம் நடத்தப்படுகிறது.
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை முதல் அத்தியாவசிய சேவையாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகிய இரு தரப்பினர்களுக்கு பெட்ரோல் விநியோகிக்கப்பட்டது.
அதனால் பலரும் நீண்ட வரிசையில் பல மணி நேரமாக காத்திருந்தனர்.
அந்நிலையில் மாலை 6 மணியளவில் பெட்ரோல் முடிவடைந்து விட்டது என எரிபொருள் நிரப்பு நிலையத்தை மூடியமையால் நீண்ட நேரமாக வரிசையில் காத்திருந்தவர்கள், தமக்கு எரிபொருள் வழங்க வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.





Spread the love
Add Comment