இலங்கை பிரதான செய்திகள்

வீடு புகுந்து பெட்ரோல் திருட்டு

யாழில் வீடு புகுந்த திருட்டுக்கும்பல் ஒன்று பெட்ரோல் மற்றும் துவிச்சக்கர வண்டி என்பவற்றை திருடி சென்றுள்ளது. யாழ்ப்பாணம் கல்வியங்காடு – புதிய செம்மணி வீதியில் உள்ள வீடொன்றில் நேற்றைய தினம் புதன்கிழமை அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.  இது தொடர்பில் தெரியவருவதாவது, 


குறித்த வீட்டார் நேற்று காலை வீட்டில் இருந்த துவிச்சக்கர வண்டியை காணவில்லை என தேடிய போதே , மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோல் திருடப்பட்டு உள்ளமையையும் கண்டறிந்தனர். 
அதனை அடுத்து வீட்டில் பொருத்தியிருந்த பாதுகாப்பு கமராவில் பரிசோதித்த போது , வீட்டினுள் நுழைந்த திருடன் துவிச்சக்கர வண்டியையும் , மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோலையும் திருடிக்கொண்டு செல்வதனை அவதானித்துள்ளனர். 

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.