Home இலங்கை விமானத்தில் வைத்து காலி முகத்திடல் போராட்டக்காரர் கைது

விமானத்தில் வைத்து காலி முகத்திடல் போராட்டக்காரர் கைது

by admin

டுபாய் நோக்கிப் பயணிக்க தயாராக இருந்த விமானத்தில் வைத்து காலி முகத்திடல் போராட்டக்காரர்களில் ஒருவர் குற்றப்பபுலனாய்வுத் துறையினரால் இன்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

டனிஸ் அலி எனும் சமூகசெயற்பாட்டாளரே இவ்வாறு டுபாய் நோக்கிப் பயணிக்கவிருந்த விமானத்தின் உள்ளே வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

தனக்கு எதிராக பயணத்தடை இருக்குமாக இருந்தால் விமானத்துக்குள் வருவதற்கு முன்னதாக விமான நிலையத்தில் வைத்து தன்னை கைது செய்திருக்கலாம எனக் கேள்வி எழுப்பிய குறித்த டனிஸ் அலி தன்னைக் கைது செய்வதற்கான ஆவணங்கள் இருந்தால் அதிகாரிகள் அதனைக் காண்பிக்க வேண்டும். என கைது செய்யப்படும்போது அதிகாரிகளிடம் கோாியுள்ளாா்

எனினும் இ எதற்கும் பதிலளிக்காத அதிகாரிகள் விமானத்தின் உள்ளே ஆசனத்தில் அமர்ந்திருந்த டனிஸ் அலியை கைது செய்து இழுத்துச் செல்லும் வீடியோ சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More