இலங்கை பிரதான செய்திகள் மலையகம்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா சம்பளம் வழங்குமாறு ​உத்தரவு

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கான சம்பளமாக 1,000 ரூபாயை வழங்குமாறு ​உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன் முதலாளிமார் சம்மேளத்தினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த ரிட் மனுவையும் ​உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

1000 ரூபாய் சம்பளம் வழங்கும் அரசாங்கத்தின் யோசனையை ரத்து செய்யக் கோரி கடந்த மார்ச் 2021 இல் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் , முதலாளிகள் சம்மேளனம் தாக்கல் செய்திருந்த ரிட் மனுவே, இன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மேலும் நாளொன்றுக்கு சம்பளமாக 1,000 ரூபாய் வழங்கப்படவேண்டும் என்ற தீர்மானத்தை 22 கம்பனிகளும் கடைப்பிடிக்கவேண்டும் எனவும் ​உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.