Home இலங்கை மரம் கடத்திய குற்றத்தில் 6 பேர் கைது

மரம் கடத்திய குற்றத்தில் 6 பேர் கைது

by admin

அனுமதி இன்றி கப் ரக வாகனத்தில் பனைமரங்களை ஏற்றிவந்த அறுவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காரைநகர் மற்றும் அல்லைப்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு பனைமரங்களை ஏற்றிவரும்வேளை பொன்னாலை பகுதியில் வைத்து இன்றைய தினம் சனிக்கிழமை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாகன சாரதி மாத்திரம் வாகனத்தில் வந்தநிலையில் ஏனையோர் மோட்டார் சைக்கிள்களில் வந்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் மற்றும் பனைமரங்களுடன் வட்டுக்கோட்டை காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More