இலங்கை பிரதான செய்திகள்

சுங்க அதிகாரிகளாக நடித்து கொள்ளையடித்த இலங்கையர் சென்னையில் கைது!

சுங்க அதிகாரிகள் போல் நடித்து இலங்கை பயணி ஒருவரிடம் தங்க நகைகளை கொள்ளையடித்த இரண்டு இலங்கை பிரஜைகளை சென்னை விமான நிலைய காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

47 வயதுடைய பெண் ஒருவர், திங்கட்கிழமை இலங்கையிலிருந்து விமானத்தில் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கைப் பிரஜைகளான 31 மற்றும் 40 வயதுடைய குற்றம் சாட்டப்பட்ட இருவரும் அந்த பெண்னை விமான நிலையத்திற்கு வெளியே நிறுத்தி, தங்களை சுங்க அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி நகைகளை எடுத்துச் செல்வதாக கூறி, நகை மற்றும் வளையல்களை இருவரும் எடுத்துச் சென்றனர். சந்தேகமடைந்த அவர், சுங்கத்துறைக்கு சென்று அவர்கள் மீது முறையிட்டுள்ளார். பின்னர் காவற்துறையிலும் முறையிட்டுள்ளார். இந்த நிலையில் இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.