உலகம் பிரதான செய்திகள்

தாய்லாந்தில் ஒரே நாளில் 17 இடங்களில் குண்டு வெடிப்புகள்

தெற்கு தாய்லாந்தில் இன்று (17) புதன்கிழமை 17 இடங்களில் குண்டு வெடிப்புகள் மறும் தீவைப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சா்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இன்று காலை மூன்று மாநிலங்களில் உள்ள பல்பொருள் அங்காடிகள் ,அத்தியாவசியப் பொருள்களை விற்கும் கடைகள், மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களை குறிவைத்து இவ்வாறு குண்டுவெடிப்பு மற்றும் தீ வைப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் இந்த தாக்குதல்களினால் 7 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தாய்லாந்தின் தெற்குப் பகுதிகயில் பல ஆண்டுகளாக கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்களை மேற்கொண்டு வந்துள்ள நிலையில் . இந்த தாக்குதல்களுக்கு இதுவரை எவரும் பொறுப்பு கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Emergency service members work in front of a shop after an explosion ripped through the southern Thailand province of Yala in what appeared to be multiple coordinated attacks in several locations, in Yala, Thailand August 17, 2022. REUTERS/Surapan Boonthanom

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.