
யாழ்ப்பாணம் பலாலி சந்தி பகுதியில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட நல்லிணக்க மையம் இலங்கை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேயினால் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
நல்லிணக்கத்தின் செயல் திட்டமாக ஆரோக்கியம் நிறைந்த நோயற்ற சந்ததியினரை உருவாக்குவதற்கு இலங்கை இராணுவத்தின் பங்களிப்புடன் இலங்கையில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தினை உருவாக்கும் முகமாக இந்த நல்லிணக்க மையம் திறந்து வைக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.
புதிதாக பதவியேற்ற இலங்கை ராணுவ தளபதியின் முதலாவது யாழ் மாவட்ட பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்துக்கு சென்றுள்ள இலங்கை ராணுவ தளபதி யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.




Spread the love
Add Comment