Home இலங்கை கஞ்சாவுடன் வாகனம் மீட்பு

கஞ்சாவுடன் வாகனம் மீட்பு

by admin

யாழ்ப்பாணம் பலாலி அன்ரனிபுரம் பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை சுமார் 100 கிலோ கஞ்சாவுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பலாலி அன்ரனிபுரம் பகுதியில் அதிகாலை இரண்டு மணியளவில் சந்தேகத்திற்கு இடமான ஹயஸ் ரக வாகனத்தை கடற்படையினர் சோதனையிட்ட போது, அதனுள் பெருந்தொகையான கஞ்சா காணப்பட்டுள்ளது.

அதனை அடுத்து வாகனத்தை கைப்பற்றிய கடற்படையினர், வாகனத்தில் இருந்த மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும், அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட போதைப்பொருள் மற்றும் வாகனத்தையும் கடற்படையினர் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

காவல்துறையினர் கைது செய்யப்பட்ட நபர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More