இலங்கை பிரதான செய்திகள்

வீதியில் கண்டெடுத்த கைச்செயினை மானிப்பாய் காவல்துறையினரிடம் ஒப்படைத்த இளைஞர்கள் – உரிமையாளரை கண்டறிந்து இளைஞர்கள் கைகளால் உரியவரிடம் ஒப்படைத்த காவல்துறை

வீதியில் கண்டெடுத்த இரண்டு பவுண் தங்க கைச் சங்கிலியை காவல்துறையினரிடம் ஒப்படைத்த இளைஞர்களை காவல்துறையினர் பாராட்டியுள்ளதுடன் , கைச் சங்கிலியின் உரிமையாளரை கண்டறிந்து , அந்த இளைஞர்களின் கைகளினால் உரிமையாளரிடம் அதனை சேர்ப்பித்துள்ளார். 

மானிப்பாய் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

சங்கானை பகுதியை சேர்ந்த ச. சபேஷ் (வயது 32), ர. றொபீகன் (வயது 20) மற்றும் ம. கோகுலன் (வயது 25) ஆகிய மூவரும் மாகியப்பிட்டி ஊடாக பயணித்த வேளை வீதியில் விழுந்து கிடந்த 2 பவுண் கைச் சங்கிலியினை கண்டெடுத்து, அதனை மானிப்பாய் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

கைச் சங்கிலியினை தவறவிட்டவர் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்தவேளை , மாகியப்பிட்டி பகுதியை சேர்ந்தவர் தனது கைச் சங்கிலியினை தவறவிட்டதை தெரிவித்துள்ளார். 

அவரிடம் கைச் செயின் தொடர்பிலான அடையாளங்களை கேட்டறிந்து , அவருடையது தான் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு காவல்துறையினா், கைச் சங்கிலியினை கண்டெடுத்து தம்மிடம் ஒப்படைத்த இளைஞர்களை அழைத்து பாராட்டி , அவர்கள் கைகளினால் உரிமையாளரிடம் அதனை கையளித்தனர். 

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.