உலகம் பிரதான செய்திகள்

கனடாவில் கத்திக் குத்து – 10 பேர் பலி – 15 பேர் காயம்!

(Royal Canadian Mounted Police assistant commissioner Rhonda Blackmore said the police were seeking Damien Sanderson and Myles Sanderson in connection with the attacks © Michael Bell/The Canadian Press/AP)

கனடாவின் மத்திய சஸ்கட்செவன் மாகாணத்தில் நேற்று இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

அந்த மாகாணத்தின் ரஜினா நகரில் உள்ள ஜேம்ஸ் ஸ்மித் க்ரீ நேஷன், வெல்டன், சஸ்கடன் ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

ஜேம்ஸ் ஸ்மித் க்ரீ நேஷன் மற்றும் வெல்டன் உள்ளிட்ட 13 இடங்களில் பாதிக்கப்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை தேடி வருவதாக றோயல் கனடியன் மவுண்டட் காவற்துறை உதவி ஆணையர் ரோண்டா பிளாக்மோர் தெரிவித்துள்ளார்.

தாக்குதலை நடத்திய சந்தேக நபர்கள் தொடர்பில் கனேடிய காவற்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதற்கமைய 31 வயதான டேமியன் சாண்டர்சன் மற்றும் 30 வயதான மைல்ஸ் சாண்டர்சன் ஆகியோர் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.