இலங்கை பிரதான செய்திகள்

கோணேஸ்வரர் ஆலய ஆக்கிரமிப்புக்கு எதிராக நடவடிக்கைகளில் இறங்கவுள்ள இந்து மாமன்றம்

திருக்கோணேஸ்வரர் ஆலயம் திட்டமிட்டு ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிராக தமது கண்டனங்களை பதிவு செய்வதுடன், ஆக்கிரமிப்புக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுப்பது எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணம் நல்லூர் கோவில் வீதியில் அமைத்துள்ள அகில இலங்கை இந்து மா மன்றத்தின் பிராந்திய அலுவலகத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நல்லை ஆதீன முதல்வரின் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. 

அதன் போது , கோணேஸ்வரர் ஆலய பகுதிகளில் பெரும்பான்மையினருக்கு வர்த்தக நிலையங்கள் அமைப்பதற்கு இடம் வழங்குதல் , வர்த்தக நிலையங்களை அமைத்துக்கொடுத்தல் ,தொல்லியல் திணைக்களத்தின் ஆக்கிரமிப்புகள் , தடைகள் என்பவை தொடர்பில் கூட்டத்தில் பேசப்பட்டது. 

குறித்த செயற்பாடுகளுக்கு எதிராக தமது கண்டனங்களை பதிவு செய்வதுடன் அவற்றுக்கு எதிரான நடவடிக்கைளை தொடர்ந்து முன்னெடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது . 

குறித்த கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன் மற்றும் த. சித்தார்த்தன் ஆகியோரும் , கோணேஸ்வரர் ஆலய நிர்வாக சபையினர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர். 

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.