Home இலங்கை பேராதனை பல்கலைக்கழக மாணவனை காணவில்லை

பேராதனை பல்கலைக்கழக மாணவனை காணவில்லை

by admin

பேராதனை பல்கலைக்கழகத்தின் நான்காம் ஆண்டில் கல்வி கற்கும், மாணவன்  ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோர் பேராதனைக் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த யக்கல பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த மாணவன் கடந்த 16ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக  முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

  மாணவனின் கையடக்கத் தொலைபேசிக்கு  அவரது நண்பர்கள் அழைப்பை ஏற்படுத்திய போது பதில் கிடைக்காததால், விடுதி உரிமையாளரிடம் விசாரித்துள்ள போது மாணவனின் அறை மூடியிருப்பதாகவே தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பின்னர் நேற்று (18) மாலை மாணவன் தங்கியிருந்த அறையை சோதனையிட்ட போது, தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மாணவனால் எழுதப்பட்ட  கடிதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More