
யாழ்ப்பாணம் வேலணைப் பகுதியில் நண்பனின் ATM அட்டையை திருடி மதுபானம் கொள்வனவு செய்தவரை 50 ஆயிரம் ரூபாய் சரீர பிணையில் செல்ல ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று அனுமதித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது நண்பனின் ATM அட்டையை திருடி 30 ஆயிரம் ரூபாய்க்கு மதுபானங்களை கொள்வனவு செய்துள்ளார்.
அது தொடர்பில் ATM அட்டையின் உரிமையாளரால் ஊர்காவற்துறை காவல்நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் சந்தேக நபரை கைது செய்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் முற்படுத்திய போது , வழக்கினை விசாரணை செய்த நீதவான் சந்தேக நபரை 50 ஆயிரம் ரூபாய் சரீர பிணையில் செல்ல அனுமதித்தார்.
Spread the love
Add Comment