Home இலங்கை ஹெரோயின் போதைப்பொருளை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றவர் கைது

ஹெரோயின் போதைப்பொருளை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றவர் கைது

by admin

ஹெரோயின்  போதைப்பொருளை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்ற  சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து வெள்ளிக்கிழமை (23)  மாலை நிந்தவூர்    காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட அக்கரைப்பற்று -கல்முனை பிரதான  வீதி செயின் வீதி சந்தியில்   வைத்து     விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் சந்தேக நபர்  கைதானார்.

இவ்வாறு கைதான நபர் நிந்தவூர் 09 பிரிவினை  பகுதியை சேரந்த  18 வயது  மதிக்கத்தக்கவர்  என்பதுடன் சந்தேக நபர்   வசம் இருந்து ஹெரோயின்  போதைப்பொருள் 04 கிராம் 200 மில்லிகிராம், சந்தேக நபர் செலுத்தி வந்த ஹொன்டா ரக மோட்டார் சைக்கிள் ,ஒரு தொகுதி பணம் என்பன  விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

பின்னர்  கைது செய்யப்பட்ட நபர்கள்  சான்று பொருட்களுடன் நிந்தவூர்    காவல்துறையினரிடம் விசேட அதிரடிப்படையினர் நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More