Home இலங்கை சாய்ந்தமருது கடற்கரை பிரதேசத்தில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது

சாய்ந்தமருது கடற்கரை பிரதேசத்தில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது

by admin

சாய்ந்தமருது   கடற்கரை பிரதேசத்தில்   மீட்கப்பட்ட பெண்  ஒருவரின் சடலம்   தொடர்பில் பொலிஸார் பொதுமக்களின் ஒத்துழைப்பினை கோரியிருந்த நிலையில் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

பெண்ணின் உறவினர்கள் சடலத்தை அடையாளம் காட்டியதுடன் அம்பாறை மாவட்டம் காரைதீவு   பகுதியை சேர்ந்த 53 வயதுடைய ஆறுமுகம் வனிதா   என்ற ஒரு பிள்ளையின் தாயார் என  அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர் ஓர் ஆசிரியர் எனவும் இம்மரணம், தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த சடலம்   பிரேத பரிசோதனைக்காக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

சாய்ந்தமருது கடற்கரையில் சடலம் – மக்களின் உதவியை நாடும் காவல்துறை


October 3, 2022 8:28 am

சாய்ந்தமருது காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட  கடற்கரை பிரதேசத்தில்  மீட்கப்பட்டுள்ள    சடலம் தொடர்பில் அடையாளம் காண  காவல்துறையினர் பொதுமக்களின் ஒத்துழைப்பினை கோரியுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது  காவல்துறை   பிரிவில்  இன்று (திங்கட்கிழமை(3)  காலை 40 வயது மதிக்கத்தக்க பெண்  குறித்த  சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய ஸ்தலத்துக்கு சென்ற சாய்ந்தமருது  காவல்துறையினர்  கல்முனை கடற்படையினருடன் இணைந்து கடலில் மிதந்த  சடலத்தை மீட்டுள்ளதுடன் சடலம்  குறித்து  ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில் சடலம் அடையாளம் காணப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து உடற்கூற்று பரிசோதனைக்காக  கல்முனை  வைத்தியசாலை சவச்சாலையில்  வைப்பதற்காக எடுத்து செல்லப்பட்டுள்ளது.

குறித்த சடலம் தொடர்பில் ஏதாவது காவல் நிலையத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தால் சாய்ந்தமருது காவல்நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு காவல்துறையினர் பொதுமக்களை கேட்டுள்ளனர்.

சுமார் 40 வயது மதிக்கத்தக்க குறித்த சடலம் தொடர்பில் அடையாளம் காணுவதற்கு காவல்துறையினருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More