இலங்கை பிரதான செய்திகள்

பேசாலையைச் சேர்ந்த 6 பேர் அகதிகளாக தனுஸ்கோடியில் தஞ்சம்:

தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 6 இலங்கை தமிழர்கள் இன்று திங்கட்கிழமை (17) காலை  தனுஷ்கோடி அடுத்த ஒன்றாம் மணல் திட்டில் சென்று இறங்கியுள்ளனர்

இலங்கை தமிழர்களை மணல் திட்டிலிருந்து மீட்ட இந்திய கடலோர காவல்படையினர் ராமேஸ்வரம் மரைன் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மன்னார்; மாவட்டம் பேசாலையை  சேர்ந்த அந்தோணி மரிய கொரட்டி, புலக்ஷன்,கணுவியா, சசிக்குமார், சனுஜன், அந்தோணி பெர்ணான்டோ உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6  பேரே இவ்வாறு யாழ்ப்பாணத்தில் இருந்து   நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு படகில் புறப்பட்டு இன்று (17) காலை தனுஷ்கோடி அருகே உள்ள முதல்; மணல் திட்டில் சென்றிறங்கியுள்ளனா். குறித்த 6 பேரும் விசாரணைக்கு பின்னா் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 181 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.