இலங்கை பிரதான செய்திகள்

வெள்ள நீரில் கழிவுகளை வீசும் விஷமிகள் – இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ள அயலவர்கள்!

யாழ்ப்பாணம் சோமசுந்தரம் வீதியையும் , கோவில் வீதியையும் இணைக்கும் கோவில் ஒழுங்கை பகுதிகளில் விஷமிகள் கழிவுகளை வீசி வருவதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். 

தற்போது மழை காலம் ஆரம்பித்ததுள்ள நிலையில் , குறித்த ஒழுங்கை பகுதியில் வெள்ளநீர் தேங்கி நிற்பதனால் , ஒழுங்கைக்குள் வசிப்பவர்கள் போக்குவரத்து உள்ளிட்ட வியடங்களில் இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர். 

இந்நிலையில் தற்போது விஷமிகள் அந்த ஒழுங்கைக்குள் கழிவுகளை கொட்டுவதனால் , பலத்த இன்னல்களை அப்பகுதிகளில் வசிப்போர் எதிர்நோக்கியுள்ளனர். 

வீசப்படும் கழிவுகள் மழை வெள்ளத்தில் மிதந்து வீட்டு வளவுக்குள் வருவதனாலும், வீதிகளில் வெள்ளநீருடன் கழிவுகள் சிதறி காணப்படுவதானலும் இன்னல்களை எதிர்நோக்குகின்றனர். 

இது தொடர்பில் மாநகர சபை உள்ளிட்ட தரப்புகளுக்கு அறிவித்துள்ள போதிலும் , உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.