இலங்கை பிரதான செய்திகள்

முகமாலையில் பேருந்திலிருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலைக்கு சுற்றுலா சென்று திரும்பிய பேருந்தில் இருந்து தவறி விழுந்தவர் நேற்றைய தினம் சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். 

கொடிகாமம் மீசாலை பகுதியை சேர்ந்த குகதாசன் விமல்ராஜ் , (வயது 47) என்பவரே உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலைக்கு பேருந்தில் சுற்றுலா சென்று மீண்டும் யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த வேளை முகமாலை இத்தாவில் பகுதியில் பேருந்தில் இருந்து குறித்த நபர் தவறி விழுந்துள்ளார். 

அதில் படுகாயமடைந்த நபரை , பளை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.