இலங்கை பிரதான செய்திகள்

வீட்டார் மேல் வீட்டில் தூங்கிக்கொண்டிருக்க கீழ் வீட்டில் திருட்டு!

வீட்டார் மேல் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த வேளை கீழ் வீட்டில் 3 இலட்சத்து 42 ஆயிரம் ரூபாய் திருட்டு போயுள்ளது.  யாழ்ப்பாணம் சுதுமலை பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது ,

குறித்த வீட்டானது. மேல் மாடி வீடாகும். அந்த வீட்டில் வசிப்போர் மேல் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த வேளை , கீழ் வீட்டின் கதவினை நூதனமான முறையில் திறந்து உள்நுழைந்த திருடர்கள் , கீழ் வீட்டில் இருந்த 3 இலட்சத்து 42 ஆயிரம் ரூபாய் பணத்தினை திருடி சென்றுள்ளனர். 

வீட்டார் தூக்கத்தால் எழுந்து கீழே வந்த போது , வீட்டின் கதவு திறந்து இருப்பதனை கண்ணுற்று வீட்டினுள் பணம் வைத்த இடத்தை பார்த்த போது , அங்கு வைக்கப்பட்டு இருந்த 3 இலட்சத்து 42 ஆயிரம் ரூபாய் பணம் காணாமல் போயிருந்தது. 

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.