
ஆலய நிர்வாகத்தின் பண மோசடி உள்ளிட்டவை தொடர்பில் வடமாகாண ஆளுநர் தலையிட்டு தீர்வொன்றினை பெற்று தர வேண்டும் என கோரிய வெளிநாட்டு பிரஜை மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள முருகன் ஆலயம் ஒன்றின் நிர்வாகத்தினர் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக அவுஸ்ரேலியாவில் இருந்து திரும்பிய அந்நாட்டு பிரஜை ஒருவர் வடமாகாண ஆளுநரை நேரில் சந்தித்து முறையிட்டு இருந்தார்.
இந்நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை காலை அவரது வீட்டுக்குள் புகுந்த மூவர் அடங்கிய குழு அவர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது.
தாக்குதலில் படுகாயமடைந்த நபர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் இளவாலை காவல்துறையினா் ர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love
Add Comment