உலகம் பிரதான செய்திகள் விளையாட்டு

உலகக்கிண்ண இருபதுக்கு இருபது தொடரை வென்ற இங்கிலாந்து அணி, வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கியது!

உலகக்கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் இறுதிப்போட்டியில் பாக்கிஸ்தான் அணியை 5 விக்கெட்களால் வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கியது.

மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய பாக்கிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 137 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பாக ஷான் மசூத் 38 ஓட்டங்களை அணித்தலைவர் பாபர் அசாம் 32 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுக்க பந்துவீச்சில் சாம் கரன் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 19 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை மாத்திரமே இழந்து வெற்றி இலக்கை கடந்து உலகக்கிண்ண இருபதுக்கு இருபது தொடரை வென்று சம்பியன்பட்டத்தை தனதாக்கியது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.