இலங்கை பிரதான செய்திகள்

யாழ்.போதனாவில் அடையாளம் காணப்படாத நிலையில் ஆண் மற்றும் பெண்ணின் சடலங்கள்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் , அடையாளம் காணப்படாத நிலையில் ஆணொருவரதும் , பெண்ணொருவரதும் சடலங்கள் காணப்படுவதாகவும் , அவற்றை அடையாளம் காண உதவுமாறும் கோரப்பட்டுள்ளது.

இளவாலை காவல்துறைப்பிரிவுக்கு உட்பட்ட திருவடி நிலை கடற்கரையில் கடந்த ஒக்டொபர் மாதம் 28ஆம் திகதி கரையொதுங்கிய ஆணொருவரின் சடலம் யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
அதேவேளை யாழ்ப்பாணம்   காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து கடந்த ஒக்டொபர் மாதம் 30 ஆம் திகதி பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டு ,காவல்துறையினரினால் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
குறித்த இரு சடலங்களையும் அடையாளம் காண உதவுமாறு யாழ்.போதனா வைத்திய சாலை தரப்பினர் கோரியுள்ளனர்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.