
யாழ்ப்பாணம் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பாடசாலை வேளைகளில் பாடசாலைக்கு அருகில் போக்குவரத்து கடமையில் மாணவர்கள் ஈடுபடுவது தொடர்பில் விழிப்புணர்வு செயற்பாடு காவல்துறையினரினால் முன்னெடுக்கப்படுகிறது.
அந்நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண மத்திய கல்லூரிக்கு அருகில் போக்குவரத்து கடமையில் ஈடுபடும் மாணவர்களுக்கான விசேட பயிற்சியும் போக்குவரத்து காப்பாளர் அங்கி வழங்கி வைக்கும் நிகழ்வும் யாழ்ப்பாண மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாண காவல் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் இடம்பெறும் குறித்த நிகழ்வில் பாடசாலை மாணவர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் சம்பந்தமான விழிப்புணர்வு முன்னெடுக்கப்பட்டது
Spread the love
Add Comment