யாழ்ப்பாணம் மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பலசரக்கு கடைகளில் காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 12 உரிமையாளர்களுக்கு யாழ்.மேலதிக நீதவான் நீதிமன்று 3 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது.
யாழ் நகர் பகுதியில் 06 பலசரக்கு கடைகள், குருநகர் பகுதியில் 05 பலசரக்கு கடைகள் மற்றும் வண்ணார் பண்ணை பகுதியில் ஒரு கடை ஆகிய 12 கடைகளிலும் காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த நிலையில் அதன் உரிமையாளர்களுக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர்களால், யாழ்.மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.
குறித்த வழக்கு இன்றைய தினம் புதன்கிழமை விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது , 12 வர்த்தகர்களும் தமக்கு எதிரான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதை அடுத்து , 12 பேருக்கும் 3 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த மேலதிக நீதவான் , சான்று பொருட்களாக மன்றில் ஒப்படைக்கப்பட்ட காலாவதியான பொருட்களை அழிக்குமாறும் உத்தரவிட்டார்.
Spread the love
Add Comment