அரசியலில் பெண்களுக்கு அதிக சதவீத ஒதுக்கீடு வேண்டும் என தென்மாகாணத்தைச் சேர்ந்த பெண் உள்ளூராட்சி சபை உறுப்பினர் சம்பிக்க நிறைஞ்சலி தெரிவித்தார்.
யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர்,
“கபே அமைப்பு ஊடாக ஜனனி என்ற வேலை திட்டத்தை அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஆரம்பித்தோம். தொடர்ச்சியாக பல பிரதேசங்களில் மேற்கொண்டு யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளோம்.”
பெண்களில் 56% வீதம் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரவேண்டும். ஆனாலும் இங்கே குறைவான வாய்ப்புக்களே உள்ளது. வேறு பல துறைகளில் பெண்களின் பங்களிப்பு அதிகமாகவே உள்ளது. ஆனால் அரசியலில் பெண்களின் பங்களிப்பு குறைவாக உள்ளது.
உண்மையில் பெண்கள் அரசியலிற்குள், கணவர் இறந்ததாலோ அல்லது தமது குடும்பம் அரசியலில் இருப்பதாலோ நுழைகின்றனர். சந்திரகா குமாரதுங்கவாக இருக்கட்டும் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவாக இருக்கட்டும் இவ்வாறான சூழ்நிலைகளிலே அரசியலிற்கு வந்தனர். இருப்பினும் அவர்கள் பாரிய பங்களிப்பை வழங்கினார்கள்.பலரிற்கு இவ்வாறான வாய்ப்பு இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
Add Comment