சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கொண்டுவரப்பட்ட 2ஆயிரத்து 640 வெளிநாட்டு சிகரெட் உடன் 39 வயதுடைய நபர் ஒருவரை தெல்லிப்பளை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.
வரிகள் கட்டப்படாமல் 132 சிகரெட் பெட்டிகளை இலங்கைக்குள் கடத்தி அதனை உடைமையில் வைத்திருந்த நிலையிலையே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் காவல் நிலைய பொறுப்பதிகாரியான பிரதான காவற்துறை பரிசோதகர் டி. தியான் இந்திக்க சில்வா தலைமையிலான குழுவினரே கைது நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் , மேலதிக விசாரணைகளை அடுத்து சந்தேகநபரை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெல்லிப்பளை காவற்துறையினர் தெரிவித்தனர்.
Spread the love
Add Comment