ஜெர்மனியின் தென்பிராந்தியத்தில் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த இரு மாணவிகள் மீது மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் 14 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 13 வயதான மற்றுமொருவர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளார். இலா்கசபொ்க் (Illerkirchberg ) எனும் நகரிலுள்ள அகதிகள் முகாமொன்றிலிருந்து வௌியே வந்த சந்தேகநபர் குறித்த மாணவிகளை தாக்கியதாக காவல்துறையினாட தெரிவித்துள்ளனர்.
எரித்திரியாவிலிருந்து ஜெர்மனிக்குச் சென்று புகலிடக் கோரிக்கை விடுத்துள்ள 27 வயதான ஒருவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாக தொிவித்துள்ள ஜெர்மனிய காவல்துறையினா் மேலும் இரு சந்தேகநபர்களையும் தடுத்து வைத்துள்ளதாக தொிவித்துள்ளனா்.
Spread the love
Add Comment