14 வயது மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமானவர் எனும் குற்றச்சாட்டில் 73 வயதான வயோதிபர் யாழ்ப்பாணம் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.போதனா வைத்திய சாலையில் கடந்த திங்கட்கிழமை 14 வயதான சிறுமி குழந்தை ஒன்றினை பிரசவித்தார்.
அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் , 73 வயதான வயோதிபரை சந்தேகத்தில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவரிடம் காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Spread the love
Add Comment