
மன்னார் மாவட்டத்தில், வைத்தியசாலைகள்,பா டசாலைகள் உள்ளடங்களான பல இடங்களில் மோப்ப நாய்களின் உதவியுடன் விசேட போதை பொருள் பரிசோதனைகளில் மன்னார் காவல்துறையினர் இன்று (8) வியாழக்கிழமை முன்னெடுத்தனர்.
வடமாண ரீதியாக போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் நோக்கில் வடமாகாண சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் பணிப்புரைக்கு அமைவாக மன்னார் காவல் லைய பொறுப்பதிகாரி ஜெயதிலக தலைமையில் இன்று(08) வியாழக்கிழமை அதிகாலை தொடக்கம் வீதிகள், பாடசாலைகள்,பொது இடங்களில் குறித்த பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பாக பாடசாலை சூழலில் போதைப்பொருள் பாவனை அறிகுறிகள் காணப்படுகிறதா? என்பது தொடர்பிலும் மோப்ப நாய்களின் உதவியுடன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பரிசோதனை தொடர்ச்சியாக அனைத்து பாடசாலைகள் மற்றும் அரச அலுவலகங்களில் மேற் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது


Spread the love
Add Comment